மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வைகோ போட்டியிட மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு  6 எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும் போட்டியின்றி எளிதாக தேர்வு செய்ய முடியும்.

அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.வுக்கு 1 இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த இடம் அன்புமணிக்கு வழங்கப்படுகிறது.தி.மு.க.வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு  1 இடம் தருவதாக தேர்தலின்போதே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய சென்னை – எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகம் தாயகத்தில் இன்று கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினருக்கு ம.தி.மு.க. வேட்பாளராக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிட ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டு உள்ளது.

வைகோவின் எம்.பி. பணி
1978 – 1996 வரை 3 முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்.1998 – 2004 வரை 3முறை சிவகாசி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் என இது வரை 5 முறை இந்திய நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் பணியாற்றி உள்ளார் வைகோ..

தற்போது ஆறாவது முறையாக இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆக தேர்வு செய்யபட உள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*