திமுக – கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு

மக்களவை தேர்தலில் திமுக – கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் பட்டியலை இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி – திமுக போட்டியிடும் தொகுதிகள் 20

சென்னை – வடக்கு, தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், தருமபுரி, காஞ்சிபுரம் – தனி, சேலம், அரக்கோணம், மயிலாடுதுறை, வேலூர், நீலகிரி – தனி, பொள்ளாச்சி, திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி – தனி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல்,

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் விவரம்

திருவள்ளூர் – தனி, கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தேனி, விருது, கன்னியாகுமரி, புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

விழுப்புரம் – தனி, சிதம்பரம் – தனி

மதிமுக போட்டியிடும் தொகுதி

ஈரோடு, + 1 மாநிலங்களவை

மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்

கோவை, மதுரை, 

கம்யூனிஸ்டு போட்டியிடும் தொகுதிகள்

திருப்பூர், நாகப்பட்டினம் – தனி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதி

ராமநாதபுரம்

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி

நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதி

பெரம்பலூர்

முன்னதாக, தொகுதிகளின் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னால், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

3 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்தாமல் தேர்தல் ஆணையம் விட்டுவைத்திருப்பதை ஏற்க முடியாது அதனால் உச்சநீதிமன்றத்தில் 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த திமுக மனு செய்துள்ளது. மனு மீது விசாரணை துவங்கியுள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*