பாகிஸ்தான் பயங்கரவாத முகாம் மீது அதிரடி தாக்குதல் ஏன்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

புல்வாமா தக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக , ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே டெல்லியில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பின்னணியில் உள்ளது. இது தொடர்பாக பலமுறை பாகிஸ்தான் அரசுக்கு தகவல் தந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மீண்டுமொரு தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்த இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை தடுக்கவே, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட்டில் உள்ள அந்த இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டார். பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனையடுத்து பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறித்து அந்நாட்டிற்கு தகவல் கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*