குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை

நாட்டின் 70-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் காவல் துறையினர் மற்றும் பள்ளி மாணவர்களின் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

புதுச்சேரியில் வருகிற 26-ம் தேதி குடியரசு தினவிழா இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு குடியரசு தினவிழா இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் காவல்தறையினர், பள்ளி மாணவ மாணவிகள், தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாணவ மாணவிகள் வீர நடை போட்டு நடந்து வந்தனர். மேலும் இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.


நாளை மறுதினம் நடைபெறும் குடியரசு தின விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தேசியக்கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். மேலும் குடியரசு தினநாள் அன்று உப்பளம், சட்டமன்ற வளாகம், பாரதி பூங்கா மற்றும் கடற்கரைசாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் செல்லு போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் நடைபெறும் குடியரசு தினவிழாவையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*