எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் – கிரண்பேடி

இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்றும், தேர்தலில் யாருடன் மோத விரும்பவில்லை என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாகவும், மேலும் அவர் ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இருவேறு செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் உலாவந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் ஆதிதிராவிட நலத்துறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டதற்கு, அவர் பதிலளிக்கையில், ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது, இது வதந்தியாக இருக்கலாம என தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் தான் போட்டியிட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், நான் எப்போதும் ஒரு நிர்வாகியாக செயல்பட விரும்புவதாகவும், தான் அரசியல்வாதியில்லை என்றும், தேர்தலில் யாருடனும் மோத விரும்பவில்லை என தெரிவித்தார்.

கிரண்பேடியின் இந்த பதில் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் உலாவந்துகொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*