பாஜகவுடன் சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி – ராம்தாஸ் அத்வாலே

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் சேரவேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று புதுச்சேரிக்கு வந்தார். தனது துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேரவேண்டும்.தமிழகத்தின் நலனை கருதி அ.ம.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*