பா.ஜ தலைவரின் நிறுவனங்களில் வருமான வரி சோதனை

உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ‘குவாலிட்டி ஹார்டுவேர்’, ‘உமாங் சேரீஸ்’, அலெக்சியா பேனல்ஸ், குவான்டம் பல்கலைக்கழகம், ‘பஞ்சாப் பிளைவுட் இன்டஸ்ட்ரீஸ்’ உள்ளிட்ட இந்த 13 நிறுவனங்களில் விற்பனையை மறைத்தல், கணக்கில் வராத ரசீதுகள் மற்றும் முதலீடுகள் என ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.

கோயல் 2016-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். கட்சியின் மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் இவர் சமீபத்தில் டேராடூன் மேயர் பதவிக்கு டிக்கெட் கேட்டு வந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*