த்ரில்லர் பட ஹீரோவாக பிரபல விஜே!!

டிவி சேனல்களில விஜே.யா இருக்குற தணிகை, இப்போ ஒரு த்ரில்லர் படம் மூலமா ஹீரோவா அறிமுகம் ஆகுறாரு.

பிரபல டிவி சேனல்களில நிகழ்ச்சித் தொகுப்பாளரா வேல பார்த்துட்டு வரவருதான் நம்ம தணிகை. எக்கச்சக்கமான சினிமா பிரபலங்கள பேட்டி எடுத்து இருக்குற இவரோட முகம், நிறைய பேருக்கு பரிச்சயமா இருக்கு.

நடிகர் அருண் விஜய் நடிப்பில, டைரக்டர் அறிவழகன் இயக்கத்தில வெளியான ‘குற்றம் 23’ படத்தில தணிகை ஒரு கதாபாத்திரத்தில நடிச்சி இருக்காரு. இப்போ, ‘தொடுப்பி’ என்னும் படம் மூலமா ஹீரோவா அறிமுகமாகுறாரு.

இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கை, சில நாளுக்கு முன்னால வெளியாச்சு. அத யாரு வெளியிட்டாருன்னு தெரியுமா? நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதாங்க. நடிகர் விஜய் சேதுபதி தன்னோட டுவிட்டர் பக்கத்தில தொடுப்பி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ட வெளியிட்டு நம்ம தணிகைக்கு  வாழ்த்தும் தெரிவிச்சு இருக்காறுனா பாத்துக்கோங்களேன்!!

பொதுவா ஒரு புதுமுக நடிகர், நடிகையின் படங்களோட ஃபர்ஸ்ட் லுக் வெளியானா, அது ஒரு நாள் டிரெண்டா இருப்பதே ரொம்ப சவாலா இருக்கும். அது சொம்ப கஷ்டம். ஆனா, தொடுப்பி படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் போன டிசம்பர் 7, 8 ன்னு 2 நாளும் டிரெண்டா இருந்துச்சு. டுவிட்டர் மட்டும் இல்லாம பேஸ்புக், இன்ஸ்டாகிராம்னு சோசியல் மீடியா எல்லாத்துலையும் வைரலா பரவுது. ரசிகர்கள் பலரோட ஆதரவ பெருது. தணிகை தன்னோட முதல் படத்துலயே இப்படி ஒரு சாதனை படைச்சது நிறைய பேரை மூக்குமேல விரல வைக்க வச்சி இருக்கு.

தேஸ்வின் பிரேம் இயக்குன இந்தப் படத்துக்கு, அன்சர் ஒளிப்பதிவு செஞ்சு இருக்காரு. ‘சோல் ஆஃப் சவுத்’ (soul of south) அப்படீன்னு ஒரு இசைக்குழு, இந்தப் படத்துக்கு இசையமைச்சு இருக்காங்க. இந்த படத்தோட ஹீரோயின் ரேஷ்மிகா. விறுவிறுப்பான ஒரு த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கு.

நாகர்கோவில், கன்னியாகுமரி, கொச்சி ஆகிய இடங்களில 60 நாளுக்கு படப்பிடிப்பு நடந்துச்சு. படப்பிடிப்பு முடிஞ்சு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை இப்போ நடந்துகிட்டு இருக்கு. இந்தப் படத்தோட டீஸர் விரைவில ரிலீஸாக இருக்குன்னு படக்குழுவினர் சொல்லி இருக்காங்க.

இந்த படத்தோட இசை வரும் ஜனவரில வெளியிடப்படும்னு சொன்ன படக்குழுவினர், பிப்ரவரி மாசத்துல படம் வெளியாகும்னு அறிவிச்சி இருக்காங்க…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*