தாரை தப்பட்டை அடித்து ஆர்ப்பாட்டம்


புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தாரை தப்பட்டை அடித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

புதுச்சேரிக்கு மத்திய அரசு நியமித்த 3 நியமன எம்எல்ஏக்களை நியமனத்தை திரும்ப பெற வேண்டும், ஆளும் அரசுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காந்திவீதி ஈஸ்வரன் கோவில் அருகே தாரை தப்பட்டை அடித்தவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், முதலமைச்சரின் பாராளுன்ற செயலாளர் லஷ்மிநாராயணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் ராஜாங்கம், முருகன் உள்பட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், ஆளுநரையும், நியமன சட்டமன்ற உறுப்பினர்களையும் திரும்ப பெற கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். கம்யூனிஸ்ட் கட்சியினர் தாரை தப்பட்டை அடித்தவாறு புதுச்சேரி மாநிலம் முழுவதும் கண்டன பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*