இணையதள வேகத்தை அதிகரிக்க செய்யும் ஜி சாட்-11

இந்தியாவில் இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க செய்யும் ஜி சாட்-11 செயற்கைக் கோள் 5-ந்தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க செய்வதற்காக ஜி சாட்-11 எனும் அதி நவீன செயற்கைக் கோளை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
கடந்த மே மாதமே இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.தற்போது ஜி சாட்-11 செயற்கைக்கோள் தயாரிப்பு பணி முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த செயற்கைக்கோள் 5854 கிலோ எடையில் மிக, மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் இஸ்ரோவின் கட்டுப்பாட்டை இழந்து எங்கோ விலகி சென்று விட்டது. கடந்த மார்ச் 29-ந்தேதி அந்த செயற்கைக்கோள் தனது தொடர்பை முழுமையாக இழந்து விட்டது.எனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி சாட்-11 செயற்கைக்கோளில் கூடுதல் கவனம் செலுத்தி தயாரித்துள்ளனர்.

ஜி சாட்-11 செயற்கைக் கோளை பிரெஞ்சு கயனாவில் இருந்து விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை மறுநாள் அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் விண்ணில் செலுத்த உள்ளனர்.ஏரைன்-5 ராக்கெட் மூலம் ஜி சாட்-11 செயற்கைக்கோள் விண்ணில் பாய உள்ளது. ஜி சாட்-11 செயற்கை கோளில் 40 அதிநவீன டிரான்ஸ்பாண்டர்கள் இடம் பெற்றுள்ளன.இதனால் இணையத்தள வேகம் கூடுதலாக கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*