ரசிகருக்கு அறிவுரை சொன்ன அஜீத்!

மிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்ட பட்டியலில் இருப்பவர் நடிகர் அஜீத். இவருடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம், அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது அஜீத் நடிப்பில் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அஜீத் வீடு திரும்பும்போது, அவரது ரசிகர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து காரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார். அதையறிந்த அஜீத், ரசிகருக்கு அறிவுரை கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ரசிகர் கூறும்போது, ”என் வாழ்நாளில் இதோடு நான்கு முறை ‘தல’யை சந்தித்து உள்ளேன். இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் ‘தல’யை சந்தித்தேன்.கூட்ட நெரிசலில் கூட ‘தல’யுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை. ‘தல’ காரை பின்தொடர்ந்தோம்.

சற்று தொலைவில் ‘தல’ காரை நிறுத்த சொல்ல டிரைவர் இறங்கி வந்தார். ‘தல’ அழைத்தார். ‘தல’ கூறியது என்னை நெகிழ வைத்தது. ”ஏன் தம்பி, உன் பெயர் என்ன?” என்றார். கணேஷ் என்றேன். ‘தல’ உடனே ”கணேஷ் தம்பி, இதுமாதிரி பின் தொடர்ந்து வருவதால் விபத்து ஏற்பட்டால் எனக்குத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கும். இது தவறு” என்றார். உடனே, சாரி அண்ணா என்றேன். பிறகு என்னை அழைத்து போட்டோ எடுத்து கொண்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*