அதுதான் நடிகைக்கு முக்கியம்! – ராக்‌ஷி

யன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவின் ஜோடியாக அனுதாபங்களை அள்ளிய ராக்‌ஷி கன்னாவுக்கு கோடம்பாக்கம் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது. ‘ஜெயம்’ ரவியுடன் ‘அடங்க மறு’, விஷாலுடன் ‘அயோக்யா’, சித்தார்த்துடன் ‘சைத்தான் கா பச்சா’ என காலில் ரெக்கை கட்டிக் கொண்டு பறக்கிறார்.

‘‘சென்னை பிடிச்சிருக்கு…. லாங்குவேஜ் தெரிஞ்சிருந்தால்தான் நல்ல நடிகையா நீடிக்க முடியும்கிறது என்னோட நம்பிக்கை. அதனாலேயே முன்னாடி தெலுங்கு சரளமா பேச கத்துக்கிட்டேன். தமிழ் இண்டஸ்ட்ரிக்கு வர்றதுக்கு முன்னாடி தமிழ் பேசுறதுக்கு…. கத்துக்க கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, இட்ஸ் ஈஸி லாங்குவேஜ். நீங்க தமிழ்ல பேசினா ஓரளவு புரிஞ்சுக்குவேன்’’ என உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார் ராக்‌ஷி கன்னா.

* தெலுங்கிலே நீங்கதான் நம்பர் ஒண்ணா?

அப்படி இருந்தா சந்தோஷம்தான். என்னோட பூர்வீகம் டில்லி. எனக்கு ஒரு அண்ணா இருக்காங்க. பி.ஏ. இங்கிலீஷ் லிட்டரேச்சர் முடிச்சிருக்கேன். சின்ன வயசில இருந்து ஐஏஎஸ் ஆகணும்ங்கிறதுதான் கனவு. ஆனா, ஆக்டிங் பக்கம் வந்தது எதிர்பாராமல் நடந்த இன்சிடன்ட். அப்பல்லாம் நான் கொஞ்சம் கூச்ச சுபாவமா இருப்பேன்.

மாடலிங்கிற்கான போட்டோ ஷூட் பண்ணும்போதே, வெட்கப்பட்டு வீட்டுக்கு ஓடியிருக்கேன். இந்தியில் அறிமுகமான ‘மெட்ராஸ் கபே’யின் ஆடிஷன் டெஸ்ட்டின் போது கூட அதே ஷை டைப்தான்.  அந்த  ஆடிஷன்லேயும் சொதப்பிட்டேன். இப்படி சினிமா பத்தி எதுவும் தெரியாமல் வந்தேன். இங்கே வந்த பிறகுதான் சினிமாவை புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.

தெலுங்கில் ‘மனம்’ல அறிமுகமானேன். அதுல சின்ன ரோல்தான்.  ஆனா, ரொம்ப ஸ்டிராங் அஸ்திவாரமாக அமைஞ்சது.  நான் டோலிவுட்ல நடிக்க வந்த புதுசுல அங்கே என்னை ஒரு நார்த் இண்டியன் பொண்ணாக மட்டும்தான் பார்த்தாங்க. அதுக்குக் காரணம் இருக்கு. நிறைய வட இந்திய பெண்கள், தென்னிந்திய பெண்களின் சாயல்கள்ல இருக்கமாட்டாங்க.

ஆனா, தெலுங்கில் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பிச்சதுல என்னை தெலுங்கு கேர்ளாகவே அங்குள்ள ஆடியன்ஸ் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் நடிக்க வந்தது எப்படி ஆக்சிடன்ட்டோ, அதே மாதிரிதான் தமிழ், தெலுங்கிற்கு என்ட்ரி ஆனதும் ஆனந்த அதிர்ச்சிதான்.

* தமிழில் கிளாமர், ஆக்‌ஷன் எதுல கலக்க போறீங்க?

ஆக்‌ஷன், கிளாமர் ரெண்டுமே போற போக்குல பண்ணலாம். ஆனா, அதைவிட, பெர்பார்ம்ல பெயர் வாங்குற கேரக்டர்கள்தான் முக்கியம். நல்ல நடிகைன்னு பெயர் வாங்குறதுதான் அவசியம். மலையாள ‘வில்லன்’ல சின்ன ரோல்தான் பண்ணினேன். ஆனா, என்னோட கேரக்டர் அதில் பேசப்பட்டுச்சு. அதுதான் எனக்கு வேணும். கதை சொல்ல வர்றவங்க கிட்ட பவுண்டட் ஸ்கிரிப்ட் படிச்சுப் பார்த்து, எனக்கு முக்கியத்துவம் இருக்குற படங்கள்லதான் செலக்ட் பண்றேன். சின்ன ரோலோ பெரிய ரோலோ, லாங்குவேஜ் முக்கியமில்லே. நல்ல ஆக்டர்னன்னு பெயர் வாங்கணும். அதுதான் நடிகைக்கு முக்கியம்.

* இப்ப நடிக்கிற படங்கள்ல என்ன ரோல்?

நான் ‘இமைக்கா நொடிகள்’ படத்திலே பண்ணின கேரக்டருக்கு நேர் எதிரான கேரக்டர்ல ‘அடங்க மறு’ல பண்ணியிருக்கேன். ‘சைத்தான் கி பச்சா’வில் ஷூட்டிங் நடக்கும் போது செம கலகலப்பா இருக்கும். ஷாட் போகும்போது, நிறைய தடவை வாய்விட்டு சிரிச்சிடுவேன். ‘ராக்க்ஷி சிரிக்காதீங்க’ன்னு டைரக்டர் குரல் கேட்டுக்கிட்டே இருக்கும். அப்படி ஒரு பன்னி மொமன்ட். ‘அடங்கமறு’ல ‘ஜெயம்’ ரவி ரொம்ப கூல் பெர்சன்.  விஷாலுடன் நடிக்கும் ‘அயோக்யா’ ஷூட் ஆரம்பிச்சாச்சு.

* ராக்‌ஷியோட பெர்சனல்?

ஆக்ட்ரசுக்கு பிட்னஸ் ரொம்ப அவசியம்னு நம்புறேன். டெய்லி ஒன்றரை மணி நேரம் ஜிம் ஒர்க்–அவுட் பண்ணிடுவேன். அப்புறம், ஸ்பைஸியான புட் எதுவும் பிடிக்காது. சாப்பாட்டு விஷயத்துல நிறைய சாப்பிடுற ஆளு இல்ல.  அதுதான் என்னோட சீக்ரட்.

ஒயிட் அண்ட் பிளாக் என்னோட லக்கி கலர்ஸ். இன்னொரு சீக்ரட் சொல்றேன். யாருக்கும் தெரியாமல் கவிதை எழுதுவேன். அடிக்கடி மியூசிக் கேட்பேன்.  பைக்னாலும், கார்னாலும் அதில் லாங் டிரைவ் போறது பிடிக்கும். அவ்ளோதான்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*