நிலாவில் தங்கியிருக்க ஐரோப்பியர்கள் திட்டம்!

ஏழு மாதங்கள் பயணித்து செவ்வாய்க்குப் போவதைவிட, மூன்றே நாட்களில், குறைந்த செலவில் நிலாவுக்குப் போகலாம் என, பல நாடுகள் நினைக்கின்றன.

எனவே, நிலாவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி, அங்கேயே அதிக நாட்கள் தங்கியிருக்கச் செய்யும் திட்டத்தை ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இ.எஸ்.ஏ., கையிலெடுத்திருக்கிறது. நிலாவில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை சோதிக்க, பூமியிலேயே, நிலாவைப் போன்ற புவி அமைப்பை ஜெர்மனியில் உருவாக்கி வருகிறது இ.எஸ்.ஏ.,

நிலாவில் கால்பதித்ததும், விண்வெளி வீரர்களுக்கு பெரிய சவாலாக இருப்பது, நிலாவின் தரையில் இருக்கும் மண் தான். அந்த மண் நுணுக்கமாகவும் கூர்மையாகவும் இருக்கும். தவிர, சூரியனின் கதிர் வீச்சு அதிகம் படுவதால், அது எளிதில் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது.

இது விண்வெளி வீரர்களுக்கு சில சமயங்களில் ஆபத்தைக்கூட விளைவிக்கும். எனவே கொலோன் நகரில் அமைத்து வரும், ‘லுானா’ என்ற, 10 ஆயிரம் சதுர மீட்டர் நிலா சோதனைக் களத்தில் நிலாவின் மண்ணைப் போலவே இருக்கும், எரிமலைச் சாம்பல் கலந்த மண்ணைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறது இ.எஸ்.ஏ.,

அடுத்து, லுானா களத்தில் விண்வெளி வீரர்களுக்கான குடியிருப்பின் மாதிரியையும் அமைத்து சோதனைகளை, இ.எஸ்.ஏ., நடத்தவிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*