இந்தியாவை கலக்கும் 7 பெண் விஞ்ஞானிகள்..!

ந்­தி­யா­வில் மற்ற எல்­லாத்­து­றை­க­ளை­யும் போல அறி­வி­யல் துறை­யும் ஆணா­திக்­கம் நிறைந்­ததே. இந்­திய விஞ்­ஞா­னி­களை பற்றி கேள்வி எழுந்­தால், பெரும்­பா­ல­ன­வர்­க­ளுக்கு தெரிந்­தது அப்­துல் கலா­மும், சர்.சி.வி.ராமன் தான். இந்­திய பெண் விஞ்­ஞா­னி­க­ளின் பெயரை சொல்­வோர் அரி­தி­லும் அரி­தா­ன­வர்­கள்.

இந்­தி­யா­வில் பெண் விஞ்­ஞா­னி­களே இல்லை என்ற தோற்­றத்­தையே இது ஏற்­ப­டுத்­தும். ஆனால் அது உணமை அல்ல. இந்­தி­யா­வில் கடந்த பல வரு­டங்­க­ளாக ஏரா­ள­மான பெண்­கள் அறி­வி­யல் துறை­யில் தங்­கள் பங்­க­ளிப்பை கொடுத்­தி­ருக்­கின்­ற­னர். மேலும் மற்­ற­வர்­கள் பின்­பற்­றக் கூடிய பாதை­யை­யும் அவர்­கள் உரு­வாக்கி இருக்­கி­றார்­கள்.அறி­வி­யல் துறை­யில் சிறந்த ஆளு­மை­க­ளாக திக­ழம் ஏழு பெண் விஞ்­ஞா­னி­களை பற்றி தெரிந்து கொள்­ள­லாம்.

மங்­களா நார்­லி­கர்
இவர் ஒரு இந்­திய கணித மேதை. மும்மை மற்­றும் புனே பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் கணி­த­வி­யல் துறை­யில் பெரும் பங்­க­ளிப்பை செலுத்­தி­யி­ருப்­ப­வர். இந்­தி­யா­வில் விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய கணி­த­வி­யல் ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளில் மங்­க­ளா­வும் ஒரு­வர். திரு­ம­ணத்­துக்கு பிறகு 16 வரு­டங்­கள் கழித்து தனது பி.எச்டி ஆராய்ச்­சியை முடித்­த­வர்.
டாடா நிறு­வ­னத்­தின் அடிப்­படை ஆராய்ச்சி மையத்­தில் பணி­யாற்­றி­ய­போது, கணி­தம் தொடர்­பாக ஏரா­ள­மான புத்­த­கங்­களை ஆங்­கி­லத்­தி­லும் மராத்­தி­யி­லும் எழு­தி­ய­வர் மங்­களா நார்­லி­கர். மராத்தி புத்­த­கம் ஒன்­றிற்­காக விஷ்­வ­நாத் பார்­வதி கோகுலே விருதை வென்­ற­வர். ஒரு ஆசி­ரி­ய­ராக தனது மாண­வர்­க­ளுக்கு கணி­தத்தை எளிய முறை­யில் கற்­பிப்­ப­தற்கு பெயர் பெற்­ற­வர்.

அதிதி பண்ட்
அதிதி பண்ட் ஒரு கட­லி­யல் ஆராச்­சி­யா­ளர். 1983ம் ஆண்டு அண்­டார்­டி­கா­விற்கு சென்று, புவி­யி­யல் மற்­றும் கட­லி­யல் தொடர்­பாக ஆராய்ச்சி மேற்­கொண்ட முதல் பெண். அலிஸ்­டர் ஹார்ட்­லி­யின் புத்­த­கத்­தின் மூலம் ஈர்க்­கப்­பட்டு, அமெ­ரிக்­கா­வின் ஹூவாய் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் அந்­நாட்டி அர­சின் நிதி­யு­த­வி­யு­டன் கடல்­சார் அறி­வி­யல் துறை­யில் எம்.எஸ். பட்­டம் பயின்­ற­வர்.
இங்­கி­லாந்­தின் லண்­டன் நக­ரில் உள்ள வெஸ்ட்­பீல்ட் கல்­லூ­ரி­யில் பி.எச்டி. முடித்த அவர், இந்­தியா திரும்பி கோவா­வில் உள்ள தேசிய கடல்­சார் ஆராய்ச்சி நிறு­வ­னத்­தில் சேர்ந்­தார். அங்கு கட­லி­யல் தொடர்­பாக பாடம் நடத்­திய அவர், மேற்கு கடற்­கரை முழு­வ­தும் பய­ணித்­த­வர்.

இந்­திரா ஹிந்­துஜா
மும்­மை­யைச் சேர்ந்த மகப்­பேறு மற்­றும் குழந்­தை­யின்மை சிகிச்சை நிபு­ண­ரான இந்­திரா ஹிந்­துஜா, இந்­தி­யா­வின் முதல் டெஸ்ட் டியூப் குழந்­தையை பெற்­றெ­டுக்க வைத்த மருத்­து­வர். நிமி­திஜி எனப்­ப­டும் இன்ட்ரா பலோ­பி­யன் டிரான்­பர் டெக்­னிக்­கில் முன்­னோ­டி­யாக திகழ்­ப­வர் இந்­திரா இந்­துஜா. இந்த அறி­வி­யல் தொழில்­நுட்­பத்­தின் மூலம் முதல் குழந்­தையை பெற்­றெ­டுக்க வைத்­த­வ­ரும் இவரே. இது­மட்­டு­மின்றி கர்ப்­பப்பை செயல் இழந்­த­வர்­கள் மற்­றும் மாத­வி­டாய் பிரச்னை உடைய பெண்­க­ளுக்­கான கரு­முட்டை தானத் தொழில்­நுட்­பத்தை இந்­தி­யா­வில் அறி­மு­கப்­ப­டு­தி­ய­வ­ரும் இந்­திரா ஹிந்­துஜா தான்.

சுனித்ரா குப்தா
ஆக்ஸ்­போர்ட் பல்­க­லைக்­க­ழத்­தில் கோட்­பாட்டு நோய்க்­கு­றி­யி­யல் துறை பேரா­சி­ரி­ய­ரா­க­வும், நாவ­லா­சி­ரி­ய­ரா­க­வும் இருப்­ப­வர் சுனித்ரா குப்தா. புளூ, மலே­ரியா உள்­ளிட்ட நோய்­களை பரப்­பும் கிரு­மி­களை பற்றி ஆராய்ச்சி செய்­வ­தில் மிகுந்த ஆர்­வம் கொண்­ட­வர் இவர். இவ­ரது அறி­வி­யல் பங்­க­ளிப்­பிற்­காக, லண்­டன் விலங்­கி­யல் கழ­கம் சிறந்த அறி­வி­ய­லா­ளர் பதக்­கத்தை வழங்கி இருக்­கி­றது. மேலும், ரோசா­லிந்த் பிராங்­கி­ளின் சோசைட்­டி­யின் விரு­தை­யும் இவர் பெற்­றி­ருக்­கி­றார்.

பரம்­ஜித் குரானா
ஆலை உயிரி தொழில்­நுட்­பம், ஜீனோ­மிக்ஸ் மற்­றும் மாலிக்­கு­லார் எனப்­ப­டும் மூலக்­கூறு உயி­ரி­யல் துறை விஞ்­ஞா­னி­யாக திகழ்­ப­வர் பரம்­ஜித் குரானா. டில்லி பல்­க­லைக்­க­ழ­கத்­தில், உயி­ரி­யல் துறை­யில் பேரா­சி­ரி­ய­ராக உள்ள பரம்­ஜித் குரானா, 125க்கும் மேற்­பட்ட ஆய்­வுக் கட்­டுரை வெளி­யிட்­டுள்­ளார். 2011ம் ஆண்டு உலக மக­ளிர் தினத்­தை­யொட்டி கந்­த­வய சன்ஸ்­தன் தன்­னார்வ தொண்டு நிறு­வ­னம் இவ­ருக்கு கவு­ர­வப்­பட்­டம் வழங்­கி­யது. மேலும் பல்­வேறு விரு­து­களை இவர் பெற்­றி­ருக்­கி­றார்.

நந்­தினி ஹரி­நாத்
பெங்­க­ளூ­ரு­வில் உள்ள இஸ்ரோ மையத்­தில் ராக்­கெட் விஞ்­ஞா­னி­யாக பணி­யாற்றி வரும் நந்­தினி ஹரி­நாத், கடந்த 20 ஆண்­டு­க­ளில் 14 ராக்­கெட் பயண திட்­டங்­க­ளில் பணி­யாற்றி இருக்­கி­றார். மங்­கள்­யான் செய்ற்­கைக்­கோள் திட்­டத்­தில் துணை செயல் இயக்­கு­ன­ராக பணி­யாற்­றி­ய­வர் நந்­தினி ஹரி­நாத். ஸ்டார் டிரக் எனப்­ப­டும் கல்ட் டெலி­வி­ஷன் திட்­டமே தனது முதல் அறி­வி­யல் வெளி­பாடு என்­கி­றார் இவர்.

ரோகினி காட்­போலே
பெங்­க­ளூ­ரு­வில் உள்ள இந்­திய அறி­வி­யல் நிறு­வ­னத்­தில் இயற்­பி­யல் துறை பேரா­சி­ரி­ய­ராக பணி­யாற்றி வரு­ப­வர் ரோகினி காட்­போலே. துகள் பெனோ­மெ­னா­ல­ஜி­யில் கடந்த முப்­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக பணி­யாற்றி வரும் இவர், துகள் இயற்­பி­ய­லில் அதீக ஆர்­வம் கொண்­ட­வர். இந்­தி­யா­வின் மூன்று முக்­கிய அறி­வி­யல் கல்வி நிறு­வ­னங்­கள், மற்­றும் வளர்ந்து வரும் உலக அறி­வி­யல் மையங்­க­ளில் தேர்­தெ­டுக்­கப்­பட்ட உறுப்­பி­ன­ராக உள்­ள­வர் ரோகினி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*